2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நிர்வாகசபை தெரிவில் குழப்பம்

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இருபாலை தெற்கு கமக்காரர்கள் அமைப்பின் புதிய நிர்வாகசபை தெரிவில் ஏற்பட்ட குழப்பத்தால், கமநல திணைக்கள உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்டது.

குறித்த அமைப்பின் விசேட பொதுக்கூட்டம், நாயன்மார்கட்டு பேச்சிஅம்மன் சனசமூக நிலைய மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்றது.

இதன்போது, மேற்படி அமைப்பில் மிக நீண்ட காலமாக தலைவராக இருந்து வந்த இராமசாமி என்பவரின் மோசடிகள் குறித்து திணைக்கள உத்தியோகத்தர்களால் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அத்துடன், புதிய நிர்வாக சபையை தெரிவுசெய்யுமாறும் கோரப்பட்டது.

இதன்போது, அதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டவேளை, இராமசாமி தலைமையிலான ஒரு குழுவினர், திணைக்கள அதிகாரிகளை தாக்கியதுடன், அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களையும் கிழித்து எறிந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X