2025 மே 19, திங்கட்கிழமை

‘நீதித்துறை உயர்வான சேவையை அர்ப்பணிப்புடன் வழங்க வேண்டும்’

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 01 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதித் துறையினராகிய எமது சேவை அரச இயந்திரத்தில் ஒரு சிறப்பான அம்சமாகும். அவ்வாறு இருக்கும் நாங்கள் மிகவும் உயர்வான சேவையை மிகுந்த அர்ப்பணிப்புடன் வழங்கவேண்டும். எந்தவித குறைகளையும் எந்தப்பக்கத்திலிருந்தும் கேட்பதற்கு இடமளிக்காது எமது பணியை ஆற்றவேண்டும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இன்று (01) இடம்பெற்ற நீதித்துறை உத்தியோகத்தர்களின் புத்தாண்டு உறுதி உரை நிகழ்வில் தலைமை உரையாற்றிய போதே நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அரச இயந்திரத்தில் நீதித்துறை ஒரு சிறப்பான அம்சமாகும். இன்றைய காலகட்டத்தில் நீதித் துறையின் செயற்பாடு வெகுவாகப் போற்றப்படுகிறது.

எங்கு பிரச்சினைகள் ஏற்பாட்டாலும் அவற்றுக்கு  நீதித் துறைதான் தீர்வை வழங்கவேண்டிய  ஒரு நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக நிறைவேற்று அதிகாரத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டாலும் அதற்கான தீர்வை வழங்கவேண்டிய நிலமை இந்த நாட்டிலே உள்ளது.

நாங்கள் மிகவும் உயர்வான சேவையை மிகுந்த அர்ப்பணிப்புடன் வழங்கவேண்டும் என்பது எனது வேண்டுதலாகும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X