Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 17 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி வலைப்பாடு நீர் விநியோகத் திட்டம், நேற்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
858 பயனாளிகள் பயனடையும் வகையில், உலக வங்கியின் 228.78 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த நீர் விநியோகத் திட்டம் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டமாக இது அமைந்துள்ளது.
நீண்ட காலமாக குறித்த பிரதேச மக்கள் குடிநீர் உட்பட நீர்த் தேவையை பூர்த்தி செய்துகொள்வதில் கடும் நெடுக்கடிகளை எதிர்கொண்டு வந்தனர்.
வறட்சி மற்றும் கடற்கரையோரத்தை அண்டிய கிராமங்கள் என்பதனால் உவர் நீர் பிரச்சினை என பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட மக்களுக்கு தற்போது இத் திட்டத்தின் மூலம் நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது. (N)
20 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
4 hours ago