2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நெற்பயிர்களை அழிக்கும் இலைமடிச்சுக்கட்டி

Freelancer   / 2022 டிசெம்பர் 16 , மு.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் நெற்பயிர்களில் மிகவும் தீவிரமாக இலைமடிச்சுக்கட்டியின் தாக்கம்  அவதானிக்கப்படுவதாக வடமாகாண பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய வானிலையானது இதன் பெருக்கத்துக்குச் சாதகமாகக் காணப்படுகிறது.

குறித்த நோயை அடையாளம் காணுவதற்கு, இதன் குடம்பி நீளப்பாடாக இலைகளை மடித்து, இலைகளின் உள்ளேயிருந்து இழையங்களை அராவி உண்ணும்.

இதனால் இலைகள் வெள்ளை நிறமாகி மடிந்து, உலர்ந்து காணப்படும். இதன் காரணமாக,
இலைகளின் பச்சையம் அகற்றப்பட்டு ஒளித்தொகுப்பின் பரப்பளவு குறைவடையும்; இதனால் விளைச்சல் பாதிப்படையும்.

கட்டுப்படுத்துவதற்கு இரைகௌவிகள் (பறவைகள்) அமர்ந்து இக்குடம்பிகளை உண்பதற்கு வசதியாக, ஆங்காங்கே தென்னை மட்டை, கங்குமட்டை போன்றவற்றை நிலைநிறுத்தி வைத்தல் மற்றும் பிரதேச விவசாய அலுவலரின் ​ஆலோசனையுடன் இராசயன மருந்துகளைப் பாவிக்குமாறு
அவர் தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X