Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
செல்வநாயகம் கபிலன் / 2017 டிசெம்பர் 25 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணம் வாங்கிவிட்டு நெல்லியடி பொலிஸார் பக்கசார்பாக நடந்து கொண்டதாக கூறி, பாதிக்கப்பட்டவரால் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கரவெட்டி - காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே, இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
கரவெட்டி - காட்டுப்புலம் பகுதியில், இளைஞன் ஒருவர், தனது இரு கைககளும் அடித்து முறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவரின் பெயர் குறிப்பிட்டு முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, நெல்லியடி பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்து அவரை உடனடியாக விடுவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய தீர்வு கிட்டப்படாத நிலையிலேயே, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு நேரடியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
காணிப் பிரச்சிணை ஒன்றின் தொடர்பில் குறித்த இளைஞனை கடுமையாக தாக்கிய சந்தேகநபர்கள் ஐவர் அவரின் இரு கைகளையும் அடித்து முறித்துள்ளனர். இரு கைகளும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த இளைஞன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில், நெல்லியடி பொலிஸார் ஐந்து சந்தேகநபர்கள் உள்ளடங்கியிருந்த நிலையில் ஒருவரை கைதுசெய்து பின்னர் விடுவித்துள்ளனர். இது தொடர்பில் இணக்கசபை மூலம் தீர்வைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இணக்க சபையில் குறித்த பிரச்சினை முற்றுப்பெறாத நிலையில், நெல்லியடி பொலிஸார் ஊடாக நீதிமன்றை நாடுமாறு பணிக்கப்பட்டிருந்தது. ஆனால், நெல்லியடி பொலிஸார் எதிர்த்தரப்பில் இருந்து பணத்தைப் பெற்று விட்டு, சந்தேகநபர்களை கைதுசெய்யாதுள்ளதாக, குறித்த இளைஞன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பின் கீழ், நெல்லியடி பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் முகமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago