Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
புதிய கொலனி கீரிமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 16ஆம் திகதியிலிருந்து காணவில்லை என்று அவரது உறவினர்கள், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (21) முறைப்பாடு செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்ரன் ஜயக்கோன் சிவகௌரி (வயது 36) என்ற பெண்ணே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் அங்கும் செல்லவில்லை. அலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போதும் அலைபேசியும் செயழிழந்து காணப்படுவதாகவும் 5 நாட்களாக வீட்டுக்கு திரும்பாததையடுத்து அவரது உறவினர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .