2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

Thipaan   / 2017 மார்ச் 10 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமக்கான நிரந்தர நியமனம் மற்றும் சம்பள உயர்வு கோரி, பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள், இன்று வெள்ளிக்கிழமை (10) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நிரந்தர நியமனம் மற்றும் சம்பள உயர்வு கோரி பல போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், உரிய பதில் எதுவும் கிடைக்காத நிலையில் வெள்ளிக்கிழமை (10) போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

அந்த போராட்டத்தின் போது, புகையிரத கடவையில், தமது போராட்டத்தின் போது புகையிரத கடவைகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தாம் பொறுப்பல்ல என்றும் மக்களை பாதுகாப்பான முறையில் கடவைகளைக் கடக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .