2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புத்துவெட்டுவான் மணற்குளம் வீதி புனரமைப்பு

Gavitha   / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு பிரதேசத்துக்குட்பட்ட உட்பட்ட புத்துவெட்டுவான் மணற்குளம் வீதியின் 125 மீற்றர் பகுதி, புதிய அரசின் கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள  புத்துவெட்டுவான் மணற்குளம் பிரதான வீதி சேதமடைந்த நிலையில் காணப்பட்டதுடன், இதனைப் புனரமைத்து தருமாறு மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில், வீட்டுக்கு வீடு கிராமத்துக்கு கிராமம் எனும் தொனிப்பொருளில் 15 ஆயிரம் கிராமங்களை மேம்படுத்தும் 2015ஆம் ஆண்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சின் நிதியுதவியுடன் குறித்த வீதியின் 125 மீற்றர் நீளமான பகுதி, கொங்கீறிட் வீதியாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம், தற்போது 220க்கும் மேற்பட்ட பயனாளிகள் தினமும் பயனடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .