2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

போராட்டம் கைவிடப்பட்டது

George   / 2017 மே 09 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடமாகாண சபையின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (09) வடமாகாண சபை கட்டட தொகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகம் ஆகியவற்றை மூடி சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாது முற்றுகை போராட்டம் ஒன்றை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டனர்.

இதன்போது அவைக்கு வந்த முதலமைச்சரை உள்ளே செல்லவிடாது வாயில் கதவுகளை பூட்டி தடுத்து தமக்கு உடனடியான பதிலை வழங்குமாறு கோரினர். இதனால் அவைக்கு முதலமைச்சர் செல்லாது திரும்பிச் சென்றார்.

இதனால், போராட்டத்துக்கு முன்னர் வந்த சில உறுப்பினர்கள் அவைக்கு உள்ளேயும் போராட்டத்தின் பின்னர் வெளியே இருந்து உள்ளே செல்ல முடியாதவாறும் சில உறுப்பினர்கள் காணப்பட்டனர்.

இந்நிலையில், சபையை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இதன்போது உள்ளே சென்றிருந்த சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளியேற முடியாத நிலை காணப்பட்டது.
இதனையடுத்து, வடமாகாண அமைச்சர்களான, பொ.ஐங்கரநேசன், ப.சத்தியலிங்கம், த.குருகுலராஜா ஆகியோர் வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, நியமனங்கள் மத்திய அரசாங்கத்தாலேயே வழங்கமுடியும். எமது திணைக்களங்களுக்கு உட்பட்டு உள்ள வெற்றிடங்களுக்கான விவரங்களை தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தெரிவித்துள்ளோம் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, வடமாகாண சபையின் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தாம் கைவிடுவதாக தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வடமாகாண சபைக்கு உட்பட்ட வெற்றிடங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு பரீட்சைகள் அற்ற நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என தெரிவித்தனர்.

இதனை தாம் பரிசீலிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், வடமாகாண சபையின் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X