Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 05 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பாலங்களுக்கு கீழ் மீன்பிடிப்பவர்கள் உரிய நடைமுறையினை பின்பற்றி மீன்பிடியில் ஈடுபடுமாறு யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை பிரதி பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில்,
பண்ணைவீதி, காரைநகர் பொன்னாலை வீதி, கேரதீவு சங்குப்பிட்டி வீதி மற்றும் வேலணை புங்குடுதீவு வீதி ஆகிய இடங்களில் பாலங்கள் மதகுகள் ஊடாக நீரேட்டத்துக்கு குறுக்காக வீதியை அண்மித்த பகுதியில் வலைகளை பாவித்து மீன்பிடிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் மீனின் ஓட்டம், இடம்மாறுகை, மற்றும் இனப்பெருக்க செயற்பாடுகளுக்கு இடையூறு இல்லாத வகையில் வலைகளை பாவித்து மீன்பிடிக்குமாறு அவர் மீனவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுவாக நீரேட்டத்தின் மறுகரையில் வலைகளை பாவிப்பவர்கள் 20 மீற்றர் தொலைவில் வலைகளை விரிக்கமுடியும்.
இதனை மீறி மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago