Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
'பசுமையான எதிர்காலத்தை நோக்கி' என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினால் சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ளதாக யாழ்;ப்பாணப் பல்கலைககழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.
மனித வாழ்வில் ஏற்படுகின்ற சவால்களை முறியடிப்பதற்கு ஆய்வு என்பது இன்றியமையாதது. இவ்வாய்வுகளை வௌ;வேறு துறைகளில் மேற்கொள்ள ஊக்குவிப்பதற்கு பல்கலைக்கழகங்கள் சிறந்த தளமாகக் கருதப்படுகின்றன.
யாழ்.பல்கலைக்கழகம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்த ஆய்வு மாநாட்டை நடத்துவதன் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் கலாசாரத்தை கல்விசார் சமூகத்திடம் ஊக்குவித்து வருகின்றது. இந்த மாநாடு மூன்றாவது முறையாக யாழ்.பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவுள்ளது.
இன்றைய காலத்தில் அனைவருக்கும் கடும் சவாலாக உள்ள சூழல் பிரச்சினையை முதன்மையாக நோக்காகக் கொண்டு 2016 ஆம் ஆண்டு ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டுக்கு விவசாயமும் உணவு விஞ்ஞானமும், உயிரியலும், சூழல் விஞ்ஞானமும், வர்த்தகம், முகாமைத்துவம், முயற்சியாண்மை, கல்வியியல், பொறியியல், சுகாதார விஞ்ஞானமும் மருத்துவ விஞ்ஞானமும், தூய விஞ்ஞானமும் பிராந்திய விஞ்ஞானமும், விளையாட்டு விஞ்ஞானம் ஆகிய தலைப்புக்களில் ஆய்வுக்கட்டுரை கோரப்படுகின்றன.
இந்த ஆய்வுக்கட்டுரைகளை 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையும் சமர்ப்பிக்க முடியும். மீளவும் கட்டுரைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு 2016 ஆம் ஆண்டு மார்;ச் மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்படும்.
தொடர்ந்து, 2016 ஏப்ரல் 1 ஆம் திகதியிலிருந்து மே 31 வரைக்கும் மாநாட்டுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்படும். 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த ஆய்வு மாநாட்டிக்கு வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களால் ஆய்வுரைகள் நிகழ்த்தப்படும்' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
19 minute ago