Editorial / 2024 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு இந்திய மீனவர்களுடன் படகொன்று மீன்பிடியில் ஈடுபட்டது. இதன்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை படகு, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகை கைப்பற்ற முனைந்த போது இந்திய மீனவர்களின் படகு கவிழ்ந்து குறித்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு மீனவர்கள் கடலில் விழுந்த நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஒருவரை காணவில்லை. இந்நிலையில் இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பு.கஜிந்தன்
1 hours ago
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
02 Mar 2026
02 Mar 2026