Freelancer / 2022 ஜூலை 04 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்து, அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி பகுதியில் உள்ள கடை ஒன்றில் டீசலை பதுக்கி விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டனர்.
இதன்போது 291 லீற்றர் டீசல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய கடை உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்தனர். (R)
56 minute ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
9 hours ago
9 hours ago