2025 ஜூலை 30, புதன்கிழமை

பனைமரம் தறித்த வீட்டு உரிமையாளருக்கு அபராதம்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 19 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

எட்டு பனைமரங்களை மாத்திரம் தறிப்பதற்கு அனுமதியினை பெற்று, மேலதிகமாக ஒரு பனைமரத்தினை தறித்த வீட்டு உரிமையாளருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டார்.

ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியினை சேர்ந்த நபர் ஒருவருக்கே; மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தறித்த பனைமரங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

2014ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில், தறிக்கப்பட்ட பனைமரங்களின் பெறுமதி தொடர்பில் மரக்கூட்டுத்தபானத்திடம் இருந்து அறிக்கை வெள்ளிக்கிழமை (18) பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .