2025 மே 21, புதன்கிழமை

பனங்காமம்குளப் புனரமைப்பு விவகாரம் : கூட்டத்தைக் குழப்பியது

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு - பனங்காமம் குளத்தின் புனரமைப்புப் பணிகள் தொடர்பில், இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கடும் வாதப் பிரதிவாதங்களால், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமையின்மை ஏற்பட்டது.

மாந்தை கிழக்குப் பிரதேசத்துக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச மாநாட்டு மண்டபத்தில், இன்று (13) காலை இணைத்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, முல்லைத்தீவு - வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள மாந்தை கிழக்கு, பனங்காமம் குளத்தைப் புனரமைத்துத் தருமாறு, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கருத்துத் தெரிவித்த அப்பகுதி கமக்கார அமைப்பினர்,

கடந்த வருடத்திலும், இக்குளத்தின் அபிவிருத்தி வேலைகளுக்கு மாவட்டச் செயலகத்தால், 8.5 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்த அவர்கள், இருந்தபோதும் அந்த நிதியின் மூலம் மேற்படி குளத்தில் உரிய புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆனால் குறித்த வேலைகள் முன்னெடுக்கப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, மற்றைய தரப்பு வேலைகள், முழுமைப் பெற்றதாகவுகம் கமக்கார அமைப்பினர் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கருத்துரைத்த நீர்ப்பாசனத் திணைக்களத்தினர், இந்த நிதியின் மூலம், பனங்காமம் குளத்தின் கீழ் இரண்டு வேலைகளாகப் பிரிக்கப்பட்டு வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர்கள்,

அணைக்கட்டில் காணப்பட்ட நீர்க் கசிவைக் கட்டுப்படுத்துவதற்கும் குளத்தின் கீழான வாய்க்கால்கள் புனமைப்புமாக, இரண்டு வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, காரசாரமான விவாதம் தொடர்ந்து இடம்பெற்றதால், கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .