2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக ஒன்றிணையுமாறு அழைப்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 27 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகத்துறை மிக மோசமாக நசுக்கப்படும் என்ற அச்சம் காணப்படுகிறது.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தங்களது  கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். எனவே, குறித்த சட்ட மூலத்துக்கு எதிராக குரல் கொடுக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு, கிளிநொச்சி ஊடக அமையும் அழைப்பு விடுத்துள்ளது.

இச் சட்ட மூலம் சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்கு வருகின்ற போது, மக்களின் உரிமைகள் சார்ந்து செய்திகள், கட்டுரைகள் எழுதுவது, பேஸ்புக்கில் பதிவுகள், கருத்துகள் தெரிவிப்பது, ஜனநாயகத்தின் அடிப்படையில் போராட்டங்களை மேற்கொள்ளவது என அனைத்து ஜனநாயக செயற்பாடுகளும், கேள்விக்குள்ளாகும் என கிளிநொச்சி ஊடக அமையும் குறிப்பிட்டுள்ளது.

எனவேதான், குறித்த சட்ட மூலத்துக்கு எதிராக கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக நாளை மறுதினம் சனிக்கிழமை (29) காலை 9 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு போராட்டத்தில், சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொண்டு, வலுச் சேர்க்குமாறும்  கிளிநொச்சி ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .