2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’பயன்பாடற்ற காணிகள் குறித்து விவரங்களைத் திரட்டவும்’

Niroshini   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிகளிலும் உள்ள பயன்பாடற்ற, வாழ்வாதாரத்தை அதிகரிக்க கூடிய, அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பான விவரங்களைத் திரட்டுமாறு, பிரதேச செயலாளர்களை யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் பணித்தார்.

'அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத்துக்கு, பிரதேச வளங்களை பயன்படுத்தல்' எனும் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்தில் உள்ள வளங்களை அடையாளப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று, யாழ். மாவட்டச் செயலகத்தில், நேற்று (27) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணத்தில், ஆட்களற்று பயன்பாடின்றி காணப்படும் காணிகளை, ஊடக நிறுவனம் ஒன்றின் பெயரில் உறுதிகள் தயாரிக்கப்பட்டு, அபகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அது தொடர்பில் பிரதேச செயலாளர்கள் கூடிய கவனம் செலுத்துமாறும் பணித்துள்ளார்.

அத்துடன், காணிகளை அடையாளம் காண்பதில் உள்ள தடைகளை இஙன்கண்டு, அவற்றை நீக்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்குமாறும், பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .