Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
பருத்தித்துறை நகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் கடந்த ஐந்தாம் திகதி சமர்பிக்கப்பட்ட வேளை, ஒரு மேலதிக வாக்கால் தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில், 19ஆம் திகதி மீண்டும் வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை, சிறிது நேரத்துக்கு முன்னராக தவிசாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று (28) உள்ளூராட்சி உதவி ஆணையாளர் செ. பிரணவநாதன் தலைமையில் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெறுவதற்க்கான கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
15 உறுப்பினர்களை கொண்ட குறித்த பருத்தித்துறை நகர சபையில் எட்டுப் பேர் கூட்டம் ஒன்றை நடத்துவதற்க்கு சமூகமளிக்க வேண்டும். ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் உட்பட ஐவரும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவரும் சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவரும் சமூகமளித்தனர்.
எனவே, ஒரு கோரம் இன்மையால் குறித்த தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அறிவித்ததுடன் பிறிதொரு திகதி அறிவிக்கப்படும் என்று கூட்டம் முடிவுறுத்தப்பட்டது.
நேற்றைய தவிசாளர் தெரிவில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்கள் அறுவரும், ஈழமக்கள் ஜனாநாயக கட்சி உறுப்பினர்கள் இருவருமாக எட்டுப் பேர் சமூகமளிக்கவில்லை
15 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
4 hours ago