2025 மே 05, திங்கட்கிழமை

பருத்தித்துறை நகர சபையில் புதிய தவிசாளர்

Freelancer   / 2023 ஜனவரி 12 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன 

பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டவர் இரண்டு மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில், பருத்தித்துறை நகர சபையின் தவிசாளராக இருந்த யோ. இருதயராஜா (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு) கடந்த மாதம் பதவி விலகியதைத் தொடர்ந்து உருவான தவிசாளர் வெற்றிடத்துக்கே நேற்று (10) தேர்தல் நடைபெற்றது.

இதன்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேலுப்பிள்ளை நவரட்ணராஜா போட்டியிட்டார். அவரை ஆதரித்து தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி, சமத்துவக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த தலா ஒவ்வோர் உறுப்பினர்களும் என எட்டுப் பேர் வாக்களித்தனர்.

கூட்டமைப்பின் தவிசாளர் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் ஆறு வாக்குகளையே பெற்றார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆறு  உறுப்பினர்களும் அவரை ஆதரித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X