Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் அதிகரித்த போக்குவரத்து காரணமாக ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கும் முகமாக, வீதிச் சட்ட ஒழுங்கைப் பேணுமாறும் வீதியோரங்களில் பூ மரங்களை நாட்டி அழகுபடுத்தல் மற்றும் வீதி பராமரிப்பு எல்லைக்குள் நிரந்தர கட்டுமான வேலைகள் போன்றவற்றைத் தவிர்க்குமாறும், பருத்தித்துறை பிரதேசசபை செயலாளர் சிவப்பிரகாசம் சிறிபாஸ்கரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“அத்தடன், வீதியோரத்தில் உள்ள வியாபார நிறுவனங்களுக்கு முன்னாள் பொருட்களை வெளியே வைத்து வியாபார நடவடிக்கைககளில் ஈடுபடுதல், வீதியோரத்தில் கட்டடப் பொருட்களைப் போட்டு இடையூறு செய்தல், பிரதேசசபையின் பொதுச்சந்தைகள், இறைச்சிக்கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் 500 மீற்றர் வரையான சுற்றாடலில் மரக்கறிகள், கடலுணவுகள், இறைச்சி வகைகள், உயிர்க்கோழிகள் என்பன வர்த்தக நிலையங்களிலோ வீதியோரங்களிலோ வைத்து விற்ப்பனை செய்வது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இவற்றை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
“மேலும், பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில், கழிவுப்பொருட்களை அனுமதியின்றி கொண்டுச் செல்லல், கொட்டுதல் ஆகியன பொதுச்சுகாதாரத்தை கருத்தில் கொண்டு தடைசெய்யப்பட்டுள்ளது. தவறின், பிரதேசசபை சட்டம் மற்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றின் பிரகாரம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
“இதேவேளை, பொதுமக்கள், வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் கொள்கலன்களில் கழிவுப் பொருட்களைத் தரம்பிரித்து அதனை அகற்றுவதற்கு எமது சபையின் தலைமை அலுவலகத்தில் உரிய கட்டணத்தைச் செலுத்தி, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
“அத்துடன், சபை எல்லைக்குள் அபிவிருத்தி செய்யப்படாமலும் பற்றைகள் வளர்ந்தும் பொதுச் சுகாதாரத்துக்கு இடையூறாக உள்ள காணிகளின் உரிமையாளர்கள், பற்றைகளைத் துப்பரவு செய்து பொதுச்சுகாதாரத்தைப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago