2025 ஜூலை 02, புதன்கிழமை

பற்றுச்சீட்டுகளின்றி ‘கட்டணங்களைச் செலுத்தாதீர்கள்’

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பற்றுச்சீட்டுகள் எதுமின்றி, எந்தவிதமான கட்டணங்களும் கமக்கார அமைப்புகளுக்குச் செலுத்தக் கூடாதென, கிளிநொச்சி மாவட்டக் கமநல சேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் என்.சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.

முரசுமோட்டை பகுதியில், மானாவாரி நிலங்களில் கால பயிர்சட செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான முன்னாயத்த பயிர்ச் செய்கைக் கூட்டமும் மானிய உரத்துக்கான பதிவுகளும், முரசுமோட்டை பொது நோக்கு மண்டபத்தில், நேற்று (02) நடைபெற்றது. இதன் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தரைத்த அவர், தற்போது சிறுபோக அறுவடை நிறைவு பெற்ற நிலையில், வயல் நிலங்களில் காணப்படுகின்ற வைக்கோலை, விவசாயிகள் தீயிட்டு கொளுத்தி வருவதாகவும் இதனால், விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடிய உயிரினங்கள் அழிவடைவதுடன், மண்ணின் தன்மையும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

எனவே, வைக்கோலைத் தீயிட்டு கொளுத்துவது, விவசாயிகள் முழுமையாக தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த அவர், அவ்வாறு மீறிச் செயற்படும் விவசாயிகளுக்கு எதிராக, எதிர்காலத்தில் மானிய உதவிகளும் காப்புறுதிகளும் வழங்கப்படுவது நிறுத்தப்படுமெனவும் எச்சரித்தார்.

இதேவேளை, கடந்த போகங்களில், முரசுமோட்டை கமக்கார அமைப்பு விவசாயிகளிடமிருந்து பற்றுச்சீட்டுகள் எதுவுமின்றி பணம் அறவிடப்பட்டமை தொடர்பாக பல்வேறுபட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

எனவே விவசாயிகள், தாங்கள் செலுத்துகின்ற பணத்துக்கு உரிய பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் பற்றுச்சீட்டுகளின்றி எந்தவிதக் கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டாமெனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .