Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலையை நோக்கி இன்று (09) காலை நடைபவனியை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து காலை 8.30 மணியளவில் குறித்த நடைபயணத்தை ஆரம்பித்து உள்ளனர்.
“அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல, அது ஓர் அரசியல் விவகாரம். எனவே அரசியல் கைதிகளின் அரசியலை பயங்கரவாதமாக பார்க்குமோர் சட்டக்கட்டமைப்புக்குள் நின்று அதை சட்ட விவகாரமாக அணுக கூடாது. மாறாக அதனை அரசியல் விவகாரமாகவே அணுக வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்து கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்” என கோரியே குறித்த நடைபவனியை பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
2 hours ago
4 hours ago