2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழகத்தில் பறந்த கறுப்பு கொடிகள் அகற்றப்பட்டன

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ். பல்கலைக்கழக வாயிலில் கட்டப்பட்டிருந்த கறுப்பு கொடிகள் மற்றும் பதாகைகள் என்பன பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களால் அகற்றப்பட்டுள்ளன. 

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரயிருந்தனர். அத்துடன் இன்றைய தினம் போராட்டங்களையும் நடத்தினர். 

இந்நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் இன்றைய தினம் காலை முதல் மாணவர்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டு ,வளாக வாயில்கள் பூட்டப்பட்டிருந்தன.

மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தின் வாயில் கதவுக்கு அருகில் கறுப்பு கொடிகள் மற்றும் பதாகைகள் என்பன கட்டப்பட்டிருந்தன.

அவற்றை சிறிது நேரத்தில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அகற்றி விட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X