2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பள்ளிக்குடா இறங்குதுறையை அபிவிருத்தி செய்யவும்

Freelancer   / 2023 மார்ச் 02 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பூநகரி, பள்ளிக்குடா இறங்குதுறையை அபிவிருத்தி செய்து தருமாறு, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிக்குடா இறங்குதுறை அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றமையால், கடற்றொழிலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் தமது படகுகளை கடலுக்கு கொண்டு செல்வதிலும் படகுகளை கரைசேர்ப்பதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

எனவே, இப்பகுதியில் உள்ள இறங்குதுறையை அபிவிருத்தி செய்து தருமாறு, இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, கடலில் இருந்து கரையை வந்தடைவதற்கு அமைக்கப்பட்ட ஆழமான வாய்க்கால் பகுதி மண் நிரம்கிக்  காணப்படுகின்றது என்றும் இதனை ஆழமாக்கித் தருமாறும் இப்பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .