2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாரதி விழா

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுத்த பாரதி விழா, ஞாயிற்றுக்கிழமை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது

தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், இந்தியத்துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். 

நிகழ்வில் யாழ். மாநகர ஆணையாளர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தொடக்கவுரையாற்றினார். 

தமிழ்ச்சங்கத்தின் மரபுக் கவிதைப் பயிலரங்க மாணவர்கள் புயலாய் புதுப்புனலாய் என்ற பொருளில் கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் கவியரங்கில் பங்கேற்றனர்.

இதன்​போது பயிலரங்கில் சித்திபெற்றோர் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.  இத்துடன், பாடசாலை மாணவர்களிடையே தமிழ்ச்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை வெற்றிக்கிண்ணத்திற்கான விவாதச் சுற்றுப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. 

இதில் முதற்பரிசை யாழ்.இந்துக் கல்லூரியின் விவாத அணியும் இரண்டாவது பரிசை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் விவாத அணியும் பெற்றுக்கொண்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X