2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பாலியல் தொல்லை கொடுக்கும் கும்பல்

Freelancer   / 2023 மார்ச் 15 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், குறித்த கும்பலை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த நபர்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் , அவற்றினை காணொளி பதிவாக கையடக்க தொலைபேசிகளில் பதிவு செய்து , அதனை காண்பித்து தொடர்ந்து தமது இச்சைகளுக்கு மாணவர்களை பயன்படுத்தி வந்ததுடன் , மாணவர்களிடம் இருந்து பணமும் பெற்று வந்துள்ளனர். 

இவை குறித்த தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அக்கும்பலை சேர்ந்தவர்களை அடையாளம் கொண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்தவற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X