Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
யாழ். குடாநாட்டுக்கு மன்னார் மாவட்ட பாலியற்றிலிருந்து குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் திட்டம் தொடர்பான பிரேரணை, கடந்த 5 வருட காலத்தில் தனக்கு ஆத்மாத்தம் அளித்த விடயமென, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் கடந்த 133ஆவது அமர்வில், பாலியாற்றில் இருந்து யாழ். குடாவுக்கு குடிநீர் விநியோகத் திட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விவரங்கள் குறித்து அவைத் தலைவரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே, மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, இந்தத் திட்டம் தொடர்பாக கடந்த வருடமே ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன என்றும் மன்னார் மாவட்டத்திலுள்ள பாலியாற்று வடிநிலம் நீரோட்டப் பகுதியில் இருந்து யாழ். குடாவுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு அடையாளம் காணப்பட்டதுக்கு அமைவாகவே, இது ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கு அமைவாக, குறித்த விடயம் தொடர்பில் கடந்த வருடம் கூட்டப்பட்ட குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைவாக நிபுணர் குழு தமக்குரிய கால அவகாசத்தைக் கோரியிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த சபை அமர்வின் போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் வழிமொழிதாலோடு, எதிர்பின்றி, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்திட்டம் தொடர்பான முன்னகர்வுக் கூட்டங்கள் அனைத்திலும் பங்கு பற்றினேன் என்றதற்கு அமைவாக இது ஒரு சிறந்த திட்டம் மட்டுமல்லாது, எதுவித தடங்கல்கள், சிக்கல்கள் இன்றி முழுமையாக நிறைவேறக்கூடிய ஒரு திட்டமாகவும் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
2 hours ago
4 hours ago