2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பிரதமர் தினேஷ் வடக்குக்கு விஜயம்

Editorial   / 2024 ஜூலை 12 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது இரு மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களிற்கும் சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதற்கமைய வௌ்ளிக்கிழமை (12)  காலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகைதரும் பிரதமர், யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெறும்  யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு (DDC) கூட்டத்தில் கலந்து கொள்வார்.

அத்துடன்,  சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார்.  குருநகர் மீனவர் துறைமுகம் அருகே உள்ள மீனவர் ஓய்வு மண்டபத்தில் மீனவர் குடும்பங்களுக்கு மீன்பிடி சாதனங்கள் மற்றும் உலர் உணவுகள் வழங்கி வைக்கவுள்ளார்.

அத்துடன்,  தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அரச ஊழியர் குழுவிற்கு நிரந்தர நியமனத்துக்கான கடிதங்களை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் வைத்து  வழங்கிவைக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புதிய வர்த்தக சேவை நிலையத்தை திறந்து வைக்கு உள்ளதுடன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும் 

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு (DDC) கூட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X