Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந், எஸ்.நிதர்ஷன், எம்றொசாந்
யாழ்., கொக்குவில் - பிரம்படி படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று (12) முற்பகல் மேற்படி பகுதியில் நடைபெற்றது.
பிரம்படி படுகொலை ஞாபகார்த்த நினைவேந்தல் குழுவும், படுகொலை செய்யப்பட்ட உறவுகளும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நினைவேந்தல் நிகழ்வில், கொக்குவில் - ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கான நினைவுத் தூபியடியில், ஈகைச் சுடரேற்றி மலர் மாலைகள் அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த. தியாகமூர்த்தி நினைவுரையாற்றினார்.
தொடர்ந்து, கொக்குவில் சனசமூக நிலைய முன்றலில் மேற்படி சனசமூக நிலையத்தின் செயலாளர் மு. ஈழத்தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். நிஷாந்தன் பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக நீண்ட காலமாக நடத்தப்படாதிருந்த கொக்குவில் - பிரம்படி படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, சுமார் 25 வருடங்களின் பின்னர் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
21 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
2 hours ago