Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண சபையின் புதிய உறுப்பினர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வரவேற்பு வழங்கினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சபாரட்ணம் குகதாஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அப்துல் நியாஸ் அகமட் ஆகிய 2 உறுப்பினர்கள் வடமாகாண சபை உறுப்பினர்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, வடமாகாண சபையின் 117 ஆவது அமர்வு கைதடியிலுள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (27) இடம்பெற்றது.
இதன்போது, அவைக்கு வருகை தந்த புதிய உறுப்பினர்கள், அவைத் தலைவரிடம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உறுப்பினர்கள் கைலாகு கொடுத்து வரவேற்று வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். இதன் பின்னர் தமது கன்னியுரைகளையும் ஆற்றியிருந்தனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .