2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

புதிய பொறுப்பதிகாரி நியமனம்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் தில்லைநாதன்

நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கான நிரந்தரப் பொறுப்பதிகாரியாக காஞ்சனா விமலவீர, இன்று (18) சம்பிரதாயபூர்வமாக பதவியேற்றார்.

மேற்படி பொலிஸ் நிலையத்தில் பொறுப்பு அதிகாரியாக கடமையாற்றி வந்த கோனாரா என்பவர்  உடனடி இடமாற்றம் பெற்று, காங்கேசன்துறைக்கு சென்றதையடுத்து, தற்காலிக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஒருவர் இணைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய காஞ்சனா விமலவீர, நிரந்தர பொலிஸ் பொறுப்பதிகாரியாக பொலிஸ் தலைமையகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் சமய விதிமுறைப்படி கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .