2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புரைக்கேறிய சிசுக்கு கொரோனா

Niroshini   / 2021 செப்டெம்பர் 16 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன்

பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலையின்  வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்த  15 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தைக்கு, கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய இந்தக் குழந்தை, புரைக்கேறிய நிலையில், நேற்று (15),  மந்திகை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதையடுத்து, குழந்தையின் சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், அந்தக் குழந்தைக்கு  கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.


இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெண் சிசுவை பிரசவித்த நிலையில் பெண்ணொருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

 அளவெட்டி வடக்கு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி என்ற பெண்ணே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் பிரசவித்த சிசு நலமுடம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளது.

செப்டெம்பர் 8ஆம் திகதி, குறித்த  கர்ப்பிணிப் பெண், உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கோவிட்-19 சிகிச்சை விடுதியில், மருத்துவக் கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அன்றைய தினமே பெண் சிசுவும் பிறந்துள்ளது.

அந்தப் பெண்ணுக்கு தொடந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், நேற்று  (15) அவர் உயிரிழந்துள்ளார்.


மேலும், பருத்தித்துறை - திக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை  (14) நள்ளிரவு, சடலமாக மீட்கப்பட்ட 56 வயதுடைய பெண்ணின் சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில்,  கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X