2025 ஜூலை 19, சனிக்கிழமை

புலிகளை நினைவுக்கூர்ந்தவர்களை கைதுசெய்ய நடவடிக்கை

Editorial   / 2017 நவம்பர் 28 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் நேற்று(27)புலிகளை நினைவுக்கூர்ந்தவர்கள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பியகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்குமபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்,இதன்போது தவறிழைத்தவர்கள் கைதுசெய்யப்படுவர் எனவும்,இது சட்டவிரோதமான செயல் என்றும்,விடுதலைப்புலிகள் அமைப்பானது தீவிரவாத அ​மைப்பென்பதோடு, இது தடைசெய்யபட்ட அமைப்பு என்றும்”அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பிரபாகரனது உருவப்படங்களை வைத்து,அவரது புகைப்படங்களை விளம்பரமாக ஒட்டி அவருக்கு கேக் வெட்டப்பட்டுள்ளதென்றால் அது தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X