2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பூநகரியில் மது விற்பனை நிலையம்; பொது அமைப்புகள் எதிர்ப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 17 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - பூநகரியில் உணவகத்துடன் கூடிய மது விற்பனை நிலையம், பொது அமைப்புகளின் அனுமதியின்றி கடந்த 12ஆம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கான சம்மதங்களை அப்பகுதி பொது அமைப்புகள் வழங்கவில்லை.  பூநகரி பிரதேச சபையும் இதற்கான அனுமதியை வழங்காத நிலையில் உணவகத்துடன் கூடிய மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.  

இதற்கான அனுமதியை வழங்கியவர்கள் தொடர்பாக இப்பகுதி பொது அமைப்புகள் ஆராய்ந்து வருகின்றன.  

மக்கள் செறிந்து வாழும் பகுதியில் குறிப்பாக பூநகரி பிரதேச வைத்தியசாலை, பூநகரி பிரதேச செயலகம் மற்றும் பூநகரி மகா வித்தியாலயம் ஆகியவை அமர்ந்துள்ள சூழலில் இம்மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. 

எனவே, இம்மது விற்பனை நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு இப்பகுதி பொது அமைப்புகள் தயாராகி வருகின்றன. 

இதேபோன்று கடந்த மாதம் 03ஆம் திகதி அக்கராயன் மேற்கில் உணவகத்துடன் கூடிய மது விற்பனை நிலையம் திறக்கப்பட்ட நிலையில், தனி நபர் ஒருவர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்து, தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். பொது அமைப்புகளும் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியிருந்தன.  

இதன் தொடர்ச்சியாக பூநகரியிலும் இவ்வாறு உணவகத்துடன் கூடிய மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X