2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பெண் ஒருவர் சடலமாக மீட்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த பெண்ணின் 4 பிள்ளைகளில் ஒருவர் இயக்கச்சி பகுதியிலும், இருவர் சுவிஸ் நாட்டிலும் வசித்து வருவதோடு ஒரு பிள்ளை இறந்த நிலையிலும் உறவினர்களின் உதவியுடன்  தெய்வேந்திரம் வசந்தி எனும்  62வயதான குறித்த வயோதிப பெண் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வழமை போல் அவரது சகோதரர் மதிய உணவை வழங்குவதற்காக குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற நிலையில் சடலமாக தனது சகோதரியை இனங்கண்ட நிலையில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவித்ததோடு சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X