2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பெரியவிளான் மக்கள் போராட்டம்

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

 

யாழ்ப்பாணம் - வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பெரியவிளான் கிராமத்தில் இருந்து நீர் விநியோகத்துக்கென, தினமும் அதிகளவான நன்னீர் உறிஞ்சி எடுக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, அப்பகுதி மக்களால், பெரியவிளான் சந்தியில், இன்று (24) காலை 8 மணியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தப் போராட்டக்காரர்கள், தமது கிராமத்தில் இருந்து காரைநகர் பிரதேசத்துக்கு, தினமும் அதிகளவான நன்னீர் உறிஞ்சி கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால், தமது நன்னீர் உவநீராக மாறி வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

தமது கிராமத்து நன்னீர், தமது கிராமத்துக்கே போதுமானதாக இல்லாத நிலையில், இங்கிருந்து அதிகளவில் நன்னீர் உறிஞ்சு எடுத்து செல்லப்படுவதாகத் தெரிவித்த அவர்கள், இது தொடர்பில் உரிய தரப்புகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும், எவ்வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லையெனவும் குற்றஞ்சாட்டினர்.

பெரியவிளானில் இருந்து நன்னீர் எடுக்கப்படுதைத் தடுக்க வேண்டுமென, பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இங்கிருந்து தினமும் நன்னீர் கொண்டு செல்லப்படுவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், போராட்டக்காரர்கள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .