Freelancer / 2025 ஜூலை 04 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மாமுனை பகுதியில் நேற்றிரவு (03) பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
கடற்படையினருக்கும் மருதங்கேணி பொலிஸாருக்கும் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு மாமுனை பகுதி முழுவதும் ஒரு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சுற்றிவளைப்பின் போது, 38 பொதிகளில் 71 கிலோ 400 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
37 minute ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
25 Apr 2026