Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வடக்கு, கிழக்கில் குறிப்பாக, முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுவரும் பெரும்பான்மையினரின் குடியேற்றங்கள், சட்டவிரோதமானவை எனக் குறிப்பிட்டுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அவை, இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு முரணானவையெனவும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக, அறிக்கையொன்றை இன்று (19) வெளியிட்ட அவர், இராணுவப் பாதுகாப்புடனேயே, பெரும்பான்மையினரின் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று குற்றஞ்சாட்டியதோடு, மகாவலி நீரே வரமுடியாத பிரதேசங்கள் கூட, மகாவலி அபிவிருத்திச் சபைக்கு உள்ளிட்ட காணிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் பெரும்பான்மையின மீனவர்களை, அங்கு தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கான அரச உதவிகளும் இராணுவ ஆதரவுகளும் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கான குடியிருப்புக் காணிகளை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்த வேலைத்திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டதெனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை, தமிழ் மக்களின் இருப்பைக் காப்பாற்றுவதற்காக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினூடாக வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டதை ஞாபகமூட்டிய அவர், ஆனால், இன்று பெரும்பான்மையினரின் குடியேற்றத்தினூடாக, வடக்கு - கிழக்கு நிலத்தொடர்பு துண்டிக்கப்படுவதாகவும், இவ்விடயம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரானதெனவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்
9 hours ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025