2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பேரவைக்கு புதிய உறுப்பினர்

Niroshini   / 2020 நவம்பர் 15 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்கு, யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறையின் முன்னாள் தலைவரும் வாழ் நாள் பேராசிரியருமான ஞானமுத்து பிலேந்திரன, புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பீடங்களின் பீடாதிபதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஈடுசெய்யும் வகையிலேயே, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் தொடர்பான அறிவித்தல், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால், யாழ். பல்கலைக்கழத் துணைவேந்தருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .