2025 ஜூலை 12, சனிக்கிழமை

‘பேரவையிலிருந்து விலக மாட்டோம்’

Editorial   / 2018 நவம்பர் 29 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

“தமிழ் மக்கள் பேரவையில் தொடர்ந்தும் நாங்கள் அங்கம் வகிக்கின்றோம்” என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் பேரவையிலிருந்து எங்களை யாரும் விலக்கவும் இல்லை. நாங்கள் விலகவும் இல்லை. அவ்வாறான நிலையில் எங்களை விலக்க வேண்டுமென்று யாரும் கோரவும் முடியாது. அவ்வாறு கNஐந்திரகுமார் பொன்னம்பலம் கோரினால் அவரை விலக்க வேண்டுமென நாங்களும் கோருவோம்.

தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் அமைப்பாகும். தமிழ் மக்களுடைய பிரச்சனைகளில் அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அழுத்தங்களைக் கொடுப்பதுக்காக ஏற்படுத்தப்பட்டது. அது அரசியல் கட்சியல்ல.

நாங்களும் அதனடிப்படையிலே தான் தமிழ் மக்கள் பேரவையின் அங்கமாக இதுவரை காலமும் செயற்பட்டு வருகின்றோம்” என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .