2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பொங்குதமிழின் 18 ஆம் ஆண்டு நிறைவு

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொங்குதமிழ் பிரகடனத்தின் 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று (17) வியாழக்கிழமை நினைவு கூரப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்துக்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு கூர்ந்தனர்.

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தால் கடந்த 2001 ஆம் ஆண்டு “பொங்கு தமிழ்” மாபெரும் எழுச்சி நிகழ்வு இடம்பெற்றது.

இவ்எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X