2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பொன்னாலையில் காற்றாலை மின் கோபுரங்கள்

Freelancer   / 2022 நவம்பர் 28 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

பொன்னாலையில் வரையறுக்கப்பட்ட முசல்பெற்றி வின்ட் பவர் (Musalpetti Wind Power (PVT) Ltd) நிறுவனத்தினரால் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல், வலி. மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இன்று (28) நடைபெற்றது.
 
பொன்னாலை தொடக்கம் அராலி வரையான கடற்கரையோரத்தில் 15 காற்றாலைக் கோபுரங்களை அமைப்பதற்கு மேற்படி நிறுவனத்தினால் இடங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
 
இக்கோபுரங்களை அமைப்பதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் தொடர்பாக சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டுவதற்காக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இதில் கலந்துகொண்டிருந்த துறைசார்ந்த அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இக்கோபுரங்களின் சாதக, பாதக அம்சங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பிய போது, குறித்த நிறுவன உத்தியோகத்தர்கள் அதற்குரிய பதில்களை வழங்கினர்.

இதன்போது, இடத்தெரிவு தொடர்பாக கிராம மட்டத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
 
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத திட்டங்களாயின் அதனை செயற்படுத்த முடியும் என இங்கு கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகளும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும்  தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் த.நடனேந்திரன் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X