2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பொறுப்புக் கூறலை நிபந்தனையாக்கவும்

Princiya Dixci   / 2022 மே 18 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

நாட்டில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு நிபந்தனைகளுள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் அமையவேண்டுமென தாம் கோரிக்கை விடுப்பதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

 வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இன்று (18) முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடரை ஏற்றி வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது மக்கள் மீது அரச பயங்கரவாதம் தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டே வந்துள்ளது.

“பெரும்பான்மையின மக்கள் போன்று நாட்டில் உரிமைகளுடன் நாமும் ஒரு தேசிய இனம் என்ற வகையில் வாழ வேண்டும் என்றே எமது இனம் அபிலாஷை கொண்டுள்ளது.

“அரசியல் உரிமைகளை கேட்டு, அஹிம்சை வழியில் போராடிய போது, எமக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்ட அரச பயங்கரவாதமே ஆயுதப் போருக்கு வழிவகுத்தது. அரச படைகள் ஊடாக எமது சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் பெண்கள் என்ற பாகுபாடின்றி மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டுள்ளோம்.

“மனித உரிமைகளுக்காக சர்வதேசம் பாடுபடுகின்ற ஒரு சூழ்நிலையில், அத்தனை உரிமைகளும் அரசினாலேயே  இலாவகமாக மீறப்பட்டுள்ளன. அரச படைகளிடம் சரணடைந்த மற்றும் அரச படைகளால் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களைத் தேடி தாய்மார் இன்றும் போராடுகின்றனர். எதற்குமே நீதி கிட்டவில்லை.

“இந்நிலையில், இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு வழங்க இணக்கம் காணப்படுகின்ற உதவிகள் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் பற்றிய பொறுப்புச் சொல்வதை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X