2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பொலிஸாரின் சோதனையைத் தொடர்ந்து தாக்குதல்

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோண்டாவில் புகையிரத வீதியில் அமைந்துள்ள ஞானவீர சனசமூக நிலையத்துக்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாதவர்களே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பி சென்று உள்ளனர் என பொலிஸாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, விசாரணைகளை மேற்கொண்டார்.

அத்துடன் அந்தப் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிபடையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை நேற்று (09) காலை முதல் கொக்குவில், கோண்டாவில் பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் விசேட அணியினர் சுமார் 150 பேர் இணைந்து வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டதுடன், மூவரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X