2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

Editorial   / 2018 ஏப்ரல் 27 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

சாவகச்சேரி மற்றும் கொக்குவில் இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடி; தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரை எவரையும் கைது செய்யாததால், யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலையங்களின் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரின் விடுப்புகளும் இன்று (27) வெள்ளிக்கிழமை தொடக்கம் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான கட்டளையை வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணாண்டோ சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கினார்.

சாவகச்சேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இரவு மூன்று வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பலொன்று அடாவடிகளில் ஈடுபட்டது. அதனால் அந்த வீடுகளில் பெறுமதியான பொருள்கள் நாசமாகின.

அத்துடன், கொக்குவில் முதலி கோவிலடியில் ஒருவர் மீது வாள்வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் இன்று (27) வரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் அடங்கியிலிருந்த வாள்வெட்டுக் கும்பல்கள் மீளவும் அடாவடிகளில் ஈடுபடுமென வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலையிலேயே யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுப்பும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X