Janu / 2024 ஜூலை 03 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் திருகோணமலையை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (07) இரவு 07 மணியளவில் இளைஞர்கள் குழு ஒன்று அமைதியின்மையை ஏற்படுத்துவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பேருந்து நிலையத்திற்கு விரைந்த பொலிஸ் குழு அங்கு அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.
அதன் போது , இளைஞர்கள் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதில் இரு பொலிஸார் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை நான்கு இளைஞர்களையும், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டமை , கடமைக்கு இடையூறு விளைத்தமை , பொது இடத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எம்.றொசாந்த்
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago