2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல்

Princiya Dixci   / 2021 மார்ச் 21 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் தொடர்பில் விசாரணை செய்வதற்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று, யாழ்ப்பாணம் - திருநகர் பகுதியில், இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.

திருநகரில், நேற்றிரவு (20) குடும்ப உறவினர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 119 அவசர பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், இன்று காலை விசாரணையை முன்னெடுக்கச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மீதே, அக்குடுபத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து, திருநகர் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன், தாக்குதல் நடத்திய சகோதரர்கள் இருவரும் நாவற்குழி பகுதிக்கு தப்பிச் சென்று, தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .