2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

போதைப் பொருள் விற்பனை : ஐவருக்கும் விளக்கமறியல்

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய போதைப் பொருள் விற்பனை நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட 5 பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இன்று (11) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய போதைப்பொருள் விற்பனை நிலையம் நேற்று மாலை (10) முற்றுகையிடப்பட்டு அங்கு போதைப்பொருளை விற்பனை செய்த ஒருவரையும் போதைப்பொருளை பெற்றுக் கொள்ள வந்த இளைஞர்கள் நால்வரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து இன்று (11) அவர்கள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, யாழ்ப்பாணத்துக்கு மாவா போதைப் பொருளை விநியோகிக்கும் பிரதான நபர் புத்தளத்தில் உள்ளார் எனவும் அவர் உள்பட மேலும் சிலரைக் கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மன்றுக்கு  அறிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X