Freelancer / 2022 ஒக்டோபர் 23 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
அச்சுவேலி பத்தமேனி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் ஏற்கனவே ஹெரோயின் போதை பொருள் மற்றும் கஞ்சா போதை பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டில் உள்ள பொருட்களை விற்று, போதைப்பொருள் வாங்கும் பழக்கத்தினை வழக்கமாகக் கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 40 மில்லி கிராம் ஹெரோயின், தேசிக்காய், மற்றும் சிறின்ஸ் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (a)
21 minute ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
5 hours ago
8 hours ago