2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தவருக்கு சிறை

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 22 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் நேற்று (21) தீர்ப்பளித்தார்.

அத்துடன், குற்றவாளி 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்று, அதனை செலுத்தத் தவறின் 2 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியது.

கோப்பாய் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 19 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது வழக்கு நேற்று (21) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதனையடுத்து நீதிமன்று தண்டனைத் தீர்ப்பை வழங்கியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .